Regional03

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் சமுதாய நூலகம் திறப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் தமிழகத்தில் முதன் முறையாக திருச்சியில் சமுதாய நூலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள ரோகிணி கார்டன் என்கிளேவ் சி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியது: தமிழக அரசு பொது நூலகத்துறை சமுதாய நூலகம் என்ற புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப் படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நூலகங்கள் திறக்கப்பட வுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் இந்த நூலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. சமுதாய நூலகம் அமைக்க குடியிருப்போர் ரூ.20 ஆயிரம் வைப்புத் தொகையாக மாவட்ட நூலக ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும். நூலகம் செயல்பட அறை மற்றும் தளவாடங்களை வழங்க வேண்டும்.

நூலகத்தை குடியிருப்போர் தனது சொந்தப் பொறுப்பிலேயே நடத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு சமுதாய நூலகம் அமைக்க முன்வந்த குடியிருப்புவாசிகளை பாராட்டு கிறேன். இந்த சமுதாய நூலக வளர்ச்சிக்காக ரூ.20 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றார்.

பின்னர், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர் களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை ஆட்சியர் வழங்கி னார்.

விழாவில், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் வீ.கோவிந்த சாமி, ஆலோசகர் எஸ்.அருணா சலம், துணைத் தலைவர்கள் கி.நன்மாறன், கணேசன், குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட மைய முதல்நிலை நூலகர் கண்ணம்மாள் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

SCROLL FOR NEXT