Regional02

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (70). அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிச் சென்றார். நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டிடிருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.53ஆயிரம் பணம் திருடு போயிருந் தது. இதேபோல, கடையின் அருகே கவிதா என்பவருக்கு சொந்தமான இனிப்பு கடையின்பூட்டும் உடைக்கப் பட்டு பலகாரங்கள் திருடப் பட்டிருந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT