திண்டுக்கல் மாவட்டம், ஒட் டன்சத்திரம் அருகே வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(29). 2013-ல் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர் களுக்கு குழந்தை பிறந்தது. இதன்பின் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மணிகண்டன் மறுத்துள்ளார். மணிகண்டனை ஒட்டன்சத்திரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்றது. மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.