Regional01

100 நாளில் 10 லட்சம் உறுப்பினரை பாஜகவில் சேர்க்கும் பரப்புரை ஜன.14-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

தமிழக பா.ஜ.க. சார்பில் இன்றும், நாளையும் கொண்டாடப்படும் ‘நம்ம ஊர் பொங்கல்’ பண்டிகை விழாக்களில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் வந்த பாஜக தலைவர் எல். முருகன், ரெகுநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தை முதல் நாள் முதல் நூறு நாளில் 10 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் சேரும் பரப்புரையைத் தொடங்க உள்ளோம். பூத் கமிட்டியை தமிழக பாஜக வலுப்படுத்தி வருகிறது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களையும் பக்தர்கள் நீராட தமிழக அரசு திறக்க வேண்டும். பெண்களை திமுக தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. இதற்கு வரும் தேர்தலில் தக்க பதில் அடி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT