அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தண்ணீர் நிரம்பி கடல்போல காட்சியளிக்கும் பொன்னேரி. 
Regional01

கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி நிரம்பியது

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பொன்னேரி நிரம்பியதால், கலிங்கு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழனால் வெட்டப் பட்ட பொன்னேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 850 ஏக்கர். இந்த ஏரி குருவாலப் பர்கோவில், ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை, பிச்சனூர் ஆகிய கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது. இந்த ஏரியின் நீரால் 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த 2 நாட் களாக ஜெயங்கொண்டம் சுற்றுப் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பொன்னேரி நேற்று முன்தினம் நிரம்பியது. இதனால், ஏரிக்கு வரும் தண்ணீர் கலிங்கு வழியாக வெளியேறுகிறது. இங்கி ருந்து வெளியேறும் தண்ணீர் வீராணம் ஏரியை சென்றடையும். ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், கடல்போல காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT