தென்காசியில் கரோனா தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார். 
Regional01

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 25 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 25 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவது போன்று ஒத்திகை நேற்று நடைபெற்றது.

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இத்தடுப்பூசிகளை மக்களுக்கு போடுவதற்கு முன்பாக, தடுப்பூசி போடும் போது நேரிடும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து களைவதற்காக நாடு முழுவதும் ஒத்திகை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ம் தேதி தமிழகத்தில் 17 இடங்களில் நடைபெற்றது. 2-ம் கட்ட ஒத்திகை நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி

தென்காசி

அவர் கூறும்போது, ‘‘ தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை, தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 4 கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

ஒத்திகைக்கு வந்த முன்களப் பணியாளர்களுக்கு உடல்வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களின் அடையாள அட்டைகள் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, கரோனா தடுப்பூசி போடுவது போன்று ஒத்திகை நடைபெற்றது. பின்னர், கண்காணிப்பு அறையில் 30 நிமிட ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஒவ்வொரு மையத்திலும் 25 பேர் என மொத்தம் 250 பேர் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

SCROLL FOR NEXT