செங்கம் அடுத்த துக்காபேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகரிஷி மனோகரன். 
Regional01

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர்மாலை அணிவித்து மரியாதை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மகரிஷி மனோகரன், எம்ஜிஆர் உட்பட பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செங்கம் தளவாநாயக்கன் பேட்டையில் இருந்து மேற்கு ஒன்றியச் செயலாளர் மகரிஷி மனோகரன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. அப்போது, துக்காப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர், அண்ணா மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

SCROLL FOR NEXT