Regional01

காஸ் சிலிண்டர் கிடங்கு முற்றுகை

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ரெட்டி யார் பாளையம் கிராமத்தில் தனியார் காஸ் சிலிண்டர் விற்பனை மையம் உள்ளது. இதன்மூலம் சுமார் 20 கிராமங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. அவசர தேவைக்காக கிடங்கில் இருந்து காஸ் சிலிண்டரை கிராம மக்கள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ரசீதில் குறிப்பிட்டுள்ள தொகையை விட கூடுதலாக ரூ.50 வரை பணம் கேட்பதாகக் கூறி, கிடங்கை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.பின்னர் அவர்கள், இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT