செய்யாறு அடுத்த சோதியம்பாக் கம் கிராமத்தில் வசித்தவர் விவசாயி பட்டாபிராமன்(65). இவர், நேற்று முன்தினம் வந்தவாசி – காஞ்சிபுரம் சாலையில் உள்ள நரசமங்கலம் கோயில் அருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு, பின்னால் வந்த ‘பொக்லைன்’ வாகனம் மோதியதில் படுகாயமடைந் தார். உயிருக்கு ஆபத்தான நிலை யில், செங்கல்பட்டு அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தூசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.