பாடகம் கிராமத்தில் புதிய பால் குளிர்விப்பு தொகுப்பு மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி . 
Regional02

பால் குளிர்விப்பு மையம் திறப்பு

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பு தொகுப்பு மையம் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு, இணை பதிவாளர் விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் இளங்கோவன், துணை பொது மேலாளர் நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் காளியப்பன் வரவேற்றார். பால் குளிர்விப்பு தொகுப்பு மையத்தை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இதில், மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT