Regional02

20% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் மனு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கல்வி மற்றும்வேலைவாய்ப்பில் வன்னியர் களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடுகோரி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கல்வி மற்றும்வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி மற்றும் பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் பாமக சார்பில் நடந்த இந்த போராட்டத்தில், பாமக துணைபொதுச் செயலாளர்களான பாலயோகி, கே.என்.சேகர், மாநில துணை அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தினேஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்களான பூபதி, மணி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மனு அளித்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், மதுராந்தகம், மறைமலை நகர்,செங்கல்பட்டு ஆகிய நகராட்சி அலுவலகங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்திலும் பாமகவினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT