Regional03

உயர் மின்கோபுரம் அமைப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் தலை மையிலான விவசாயிகள் நேற்றுவிழுப்புரம் ஆட்சியர் அண்ணா துரையிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதா வது:

செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்களில் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைத்து, லைன் இழுக்கும் பணியை 80 சதவீதம் முடித்துள்ளனர். விவசாயிகளின் கருத்தை கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வில்லை.

இதுகுறித்து செஞ்சி, மேல்மலையனூர் வட்டாட்சியர் களிடம் மனு அளித்தும் எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே ஆட்சியர் நேரடியாக தலையிட்டு பணிகளை முடிக்கும் முன் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT