Regional02

கட்டிமேடு அரசுப் பள்ளிக்கு ரூ.50,000 பரிசு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளி களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் பல்வேறு வகை யில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட் டதைப் பாராட்டியும், அதிக நன்கொடை பெற்று பள்ளியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட தற்காகவும், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசினர் மேல்நிலைப் பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகையை கடந்த 5-ம் தேதி நடைபெற்ற விழாவில், ஆட்சியர் வே.சாந்தா முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப் ஆகியோரிடம், அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

SCROLL FOR NEXT