TNadu

மஞ்சள் கடத்தியதாக4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் மன்னார் பகுதியில் அந்நாட்டு கடற்படையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகமான வகையில் வந்த இந்திய படகு ஒன்றை அவர்கள் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 1,650 கிலோ மஞ்சள் மற்றும் 150 கிலோ ஏலக்காய் இருந்தது. படகுடன் அவற்றை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (40), லூர்து (42), மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (42), பாம்பனைசேர்ந்த தர்மர் (64) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

4 பேரும் நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை போலீஸார் அவர்களிடம் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT