Regional02

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 821 ஏரிகள் நிரம்பின

செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இம்மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 821 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. 83 ஏரிகள் 75% முதல் 100% வரை நிரம்பியுள்ளன. 5 ஏரிகளில் 50 முதல் 75 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

தொடர்ந்து நேற்றும் மழை பெய்து இருப்பதால் நீர்வரத்து ஏரிகளுக்கு வந்து கொண்டுள்ளது. இதனால் விரைவில் மேலும் சில ஏரிகள் நிரம்பலாம் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT