Regional02

விபத்தில் பெண் மரணம்

செய்திப்பிரிவு

தேனி அருகே அரண்மனை புதூர் முல்லை நகரைச் சேர்ந்த ராமராஜ் மகன் ராம்பிரசாத். இவர் தனது தாயார் மேகலாவை(51) நேற்று முன்தினம் வீரபாண்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தார். சத்திரப்பட்டி சாலையில் உள்ள கோழிப் பண்ணை அருகே வரும்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT