Regional01

சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் அளிப்பதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவர்கள் பி.சரவணன், சி.நாகராஜ், எஸ்.செங்குட்டுவன், கே.சட்டையப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய கோட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜா கூறும்போது, ‘‘ கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.28-ல் ஈரோடு, பிப்.3-ல் விழுப்புரம், பிப்.10-ல் தூத்துக்குடி, பிப்.17-ல் சிவகங்கை, பிப்.26-ல் சேலம் ஆகிய மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், பிப்.26-ம் தேதி சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான கோரிக்கை சிறப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழக முதல்வரை அழைக்கவுள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT