திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணியின் கரையையொட்டி வெள்ளம் ஓடுவதால், கரையோரத்திலேயே பொதுமக்கள் குளிக்கின்றனர். படம்: மு.லெட்சுமி அருண். 
Regional01

பாபநாசம் அணைக்கு 2,016 கனஅடி தண்ணீர் வரத்து குற்றாலம் அருவியில் வெள்ளம் குறைந்தது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 1, மணிமுத்தாறு- 1, நம்பியாறு- 10, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 5, சேரன்மகாதேவி- 9.40, நாங்குநேரி- 10, பாளையங்கோட்டை- 5.40, திருநெல்வேலியில் 2 மிமீ மழை பெய்துள்ளது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,016 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2,220 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 115.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,399 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

195 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 143.24, வடக்கு பச்சையாறு- 30, நம்பியாறு- 10.62, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 26 அடியாக உள்ளது.

தென்காசி

கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பியுள்ளதால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படு கிறது. ராமநதி அணை நீர்மட்டம் 79.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.98 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 73.25 அடியாகவும் இருந்தது.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க 2 நாட்களாக தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலை யில், நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால், பிரதான அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 115.40 அடியாக இருந்தது.

SCROLL FOR NEXT