Regional02

முன்னாள் படைவீரர்கள் வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம்

செய்திப்பிரிவு

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, முப்படைகளில் அவில்தார் மற்றும் அதற்கு இணையான படைத்தரம் வரை பணியாற்றியவர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.

மறு வேலை வாய்ப்பு ஏதும் பெறாமல் சொந்த வீடு இல்லாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் 1.4.2020-க்கு பிறகு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் பெற்று, சொந்தமாக புதிதாக கட்டப்படும் அல்லது வாங்கப்படும் முதல் வீட்டுக்கு தமிழக முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் மானிய தொகை வழங்கப்படும்.

தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை நேரில் அணுகி, விண்ணப்பம் மற்றும் விவரங்களைப் பெற்று பயனடையலாம். இத்தகவலை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT