கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 16 ஆயிரத்து 337 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார். மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு கல்வி பயில்வதில் எவ்வித சிரமமும் இருக்கக்கூடாது என்ற அக்கறையின் அடிப்படையில் பேருந்து பயண அட்டைகள், மடிக்கணினி, சீருடைகள், சைக்கிள், பாடப்புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 140 பள்ளிகளில் பயிலும் 7,528 மாணவர்கள், 8,809 மாணவிகள் என, மொத்தம் 16,337 மாணவ, மாணவியருக்கு ரூ.6.44 கோடியில் சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகனன், ராமச்சந்திரன், ரெஜினி, மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியண்ட் தாஸ், மாவட்ட ஆவின் தலைவர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி