Regional02

வாகனத் திருட்டு; ஒருவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காங்கயம் சாலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

அதில், சேலம் மாவட்டம் கெங்கவள்ளியை சேர்ந்த டி.தங்கவேல் (25) என்பதும், திருப்பூரில் தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT