உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாக அடையாள அட்டை பெற்றுள்ள வர்களுக்கு மட்டுமே கடன் அளிப்பதாக தெரியவருகிறது. அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் கடன் என்றால், இல்லாதவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை இல்லாமல், ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பிழைத்து வருகிறார்கள். எனவே, தகுதியான அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். விண்ணப்பித்தோருக்கு வங்கிகள் காலம் தாழ்த்தாமல் கடன் வழங்க வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.