குறிப்பாக, அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட 14, சேவூர் காவல் எல்லைக்கு உட்பட்ட 16 என 30 கிராமங்களை கண்காணிக்கும் வகையில் 30 காவலர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "அந்தந்த கிராமப் பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் புகைப்படம், அவர்களது அலைபேசி எண்ணுடன் கூடிய தகவல் பெயர்ப்பலகை கிராமங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக பொதுமக்கள் உடனடியாக அந்தந்த காவலர்களுக்கு குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் மூலமாக குற்றங்களை தடுக்க முடியும். முதற்கட்டமாக அவிநாசி, சேவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து, பிற பகுதிகளிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.