Regional02

வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60,800 பறிமுதல்

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகர் குமரன் சாலையிலுள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தட்சிணா மூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கவுசல்யா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அதிகாரிகள் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத் தில் பணிபுரியும் அலுவலர்க ளின் அறைகள், மேசைகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இதில், கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. இடைத்தரகர்களாக செயல்பட்ட சிவக்குமார், ராம்குமார், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகே, முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT