Regional02

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகரோனா ஆய்வகத்தில் தீ விபத்து

செய்திப்பிரிவு

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் 2- வது மாடியில் கரோனா பரிசோதனை ஆய்வகம் உள்ளது. நேற்று அதிகாலை 1 மணியளவில் ஆய்வகத்தில் இருந்த ஏ.சி. வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது.

ஆய்வகத்தில் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் நிறைய இருந்தன. அனைத்து மாதிரிகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து புகை மூட்டமாக காணப்பட்டது .மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததின் பேரில், விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் , விக்கிரவாண்டி போலீஸார் விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆய்வக உபகரண பொருட்கள் எரிந்து சேதமானது. இவ்விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT