Regional02

சவப்பெட்டியுடன் மனு கொடுக்க வந்த 20 பேர் கைது

செய்திப்பிரிவு

டிஎன்டி எனும் ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி, சவப்பெட்டியுடன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கள்ளர், மறவர் உள்ளிட்ட 68 உட்பிரிவுகளை உள்ளடக்கிய சீர்மரபினர், தங்களுக்கு வழங்கப்படும் இரட்டைச் சான்றிதழ் முறையை ரத்துசெய்து டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி சவப்பெட்டியுடன் தேனி ஆட்சியர் அலுவல கத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், டிஎன்சி என்ற பிரிவின் கீழ் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுவதால் கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற முடியவில்லை. தவறாக இதுபோன்று சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றனர்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்குப் பேரணியாக கிளம்பியவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 பேரைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT