Regional01

பயங்கர வெடிச்சத்தம் நாமக்கல்லில் பரபரப்பு

செய்திப்பிரிவு

நாமக்கல், மோகனூர் பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், மோகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) வெடித்தது என பலரும் நினைத்தனர். எனினும், எங்கும் மின்மாற்றி வெடிக்கவில்லை என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

வெடிச்சத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் அறிய முடியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த வெடிச்சத்தம் நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT