Regional02

சேலம்- அரக்கோணம் இடையேநாளை முதல் விரைவு ரயில் இயக்கம்

செய்திப்பிரிவு

சேலம்- அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் நாளை (6-ம் தேதி ) முதல் முன்பதிவு வசதியுடன் கூடிய எம்இஎம்யு விரைவு சிறப்பு ரயில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர 5 நாட்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (5-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சேலம்- அரக்கோணம் சிறப்பு விரைவு ரயில், சேலத்தில் மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.10 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு சேலத்துக்கு காலை 10.50 மணிக்கு வந்தடையும்.

சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சாமல்பட்டி, தாசம்பட்டி, தாதம்பட்டி, மொரப்பூர், புட்டிரெட்டிப்பட்டி, பொம்மிடி, தின்னப்பட்டி, கருப்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT