புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலையத்தில் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை- ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் நேற்று முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுவதுடன், கீரனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதைக் கண்டித்து கீரனூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்துக்கு தலைமை வகித்த திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் பேசியதாவது:
பேரூராட்சியாக உள்ள கீரனூரில் அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், நீதி மன்றம் போன்றவை உள்ளன.
இங்கிருந்து திருச்சி போன்ற ஊர்களுக்கு சென்னை-ராமேசு வரம் ரயிலையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.மீண்டும் இந்த ரயிலை கீரனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரயில் மறியலில் ஈடுபடுவோம் என்றார்.
திமுக மாநில செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித் தன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.