பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண் டனர்.
பெல் நிறுவனத்தில் உள்ள பெல் தொழிலாளர்கள் சங்கம், ஐஎன்டியுசி, ஏஐடியுசி ஆகிய வற்றை சேர்ந்த நிர்வாகிகள் 13 பேர், உறுப்பினர்கள் 50 பேர் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் என்.கார்த்திக் மேற் கொண்டார்.
அதிமுக ஒன்றியச் செயலாளர் கள் கும்பகுடி டி.கோவிந்தராஜ், எஸ்.எஸ்.ராவணன், துவாக்குடி நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டி யன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.