Regional01

மலைப்பகுதியில் 3,800 விதைப்பந்துகள் விதைப்பு

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட செங்கானூர் நரிப்பொத்தை மலைப்பகுதியில் 3,800 விதைப் பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடை பெற்றது.

சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆப் லைப் சயின்ஸ் மற்றும் டால்பின் வாழ்வியல் அமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ராமசுப்பு வரவேற்றார். பயிற்சி வனச்சரகர் சிவா மற்றும் கடையம் வனவர் முருகசாமி ஆகியோர் விதைப்பந்து வீசும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மாரிச்செல்வம் பேசினார்.

]இயற்கை ஆர்வலர்கள் மனோஜ் பிரபாகரன், முருகேஷ் , கார்த்திக் ராஜா, முத்துபிரகாஷ், அஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நவீன் தாமஸ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT