திருவண்ணாமலை நகராட்சியில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய மாவட்ட அதிமுக செயலாளரும் ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. அடுத்த படம்: செய்யாறில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய எம்எல்ஏ தூசி கே.மோகன். கடைசிப்படம்: கலசப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய எம்எல்ஏ பன்னீர்செல்வம்.
செய்யாறு, திருப்பனங்காடு பெருங் கட்டூர், மோரணம், வட பூண்டிபட்டு, வாக்கடை, வடதின்னலூர் உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை செய்யாறு எம்எல்ஏ தூசி கே. மோகன் நேற்று வழங்கினார். மேலும், 68 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.