Regional02

மரடோனா நினைவு கால்பந்துப் போட்டி தோடர் பழங்குடியின அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

உதகையில் நடந்த மரடோனா நினைவு கால்பந்துப் போட்டியில் தோடர் பழங்குடியின அணி வெற்றி பெற்றது.

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா நினைவாக நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டிக்கு ஆர்எம்எப்சி தோடா மற்றும் ஷூலெஸ் ஒன்ஸ் அணிகள் மோதின.

நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியின் ஆட்டநேர இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஆர்எம்எப்சி தோடா அணி வெற்றி பெற்றது. போட்டியின் சிறந்த கோல்கீப்பராக ஆர்எம்எப்சி தோடா அணியின் நர்தேஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீரராக ஷூலெஸ் ஒன்ஸ் அணியின் வீரர் கவுரி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற அணிக்கு இந்திய நீண்டதூர ஓட்டப்பந்தய வீரர் லட்சுமணன் கோப்பை மற்றும் பரிசுத் தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கினார். இரண்டாம் இடம்பிடித்த அணிக்கு ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT