Regional01

திருக்கோவிலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிதை நூல் அறிமுக விழா

செய்திப்பிரிவு

திருக்கோவிலூரில் கோவல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் "தபுதாராவின் புன்னைகை" கவிதை நூல் அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் பாரதி மணாளன் வரவேற்றார். திருக்கோவிலூர் வட்டாட்சியர் கி.சிவசங்கரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கவிஞர் கார்த்திக் திலகன், மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத், தமிழ்ச் சங்கப் பொருளாளர் புலவர் சி.குருராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்ச்சங்க துணைத் தலைவர் பா.கார்த்திகேயன் தொடக்கவுரையாற்றினார். திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கி. சாய்வர்த்தினி, தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலரும் நூலாசிரியருமான கவிஞர் தாமரை பாரதிக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.

காவல் துணை கண்காணிப்பாளர் கவிஞர் ஜி.கே.ராஜு நினைவுப் பரிசு வழங்கினார்.எழுத்தாளர்கள் அசதா, க.ஸ்டாலின், காலபைரவன், கண்டராதித்தன், மு.கலியபெருமாள் ஆகியோர் "தபுதாராவின் புன்னைகை" கவிதை நூலினை ஆய்வு செய்து பேசினர். மத்திய கூட்டுறவு சங்க மேலாளர் அப்துல் ஜப்பார், நாடொப்பனசெய் குழு நிர்வாகி கதிர்வேல், கவிஞர்கள் வே.ஜெயக்குமார், அ.சிதம்பரநாதன், அ.குணசேகரன், தலைமையாசிரியர்கள் க.ரவி, ராஜேந்திரன், நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன், சுப்ரமணியன் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள். அறம் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர்கள் சாந்தி, ஆனந்தி, தேவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கவிஞர் லில்லி ஏஞ்சல்ஸ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT