நாமக்கல்லில் நடைபெற்ற குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ். 
Regional02

சேலம் உட்பட 4 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 24,659 பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வில் பங்கேற்க சேலம் மாவட்டத்தில் 15,042 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 8,336 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் 31 தேர்வு மையங்களில் 48 தேர்வுக் கூடங்களில் தேர்வு நடைபெற்றது.

சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தேர்வை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.

ஈரோடு

நாமக்கல்லில் 4,359 பேர்

நாமக்கல் வடக்கு, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தருமபுரி-கிருஷ்ணகிரி

அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வுக்கு 5,090 பேர் விண்ணப்பித்திருந்தனர். 17 மையங்களில் நடந்த தேர்வில் 2,408 பேர் பங்கேற்றனர். கிருஷ்ண கிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி ஆய்வு நடத்தினார்.

SCROLL FOR NEXT