சந்திரபுஷ்கரணியில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி. 
Regional01

வைகுண்ட ஏகாதசி விழா ரங்கம் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்

செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து, ராப் பத்து என 21 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு கடந்த டிச.25-ம் தேதி நடைபெற்றது.

ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு சொர்க்க வாசல் வழியாக சந்திர புஷ்கரணி குளத்துக்கு சயனப் பெருமாளுடன் வந்து சேர்ந்தார்.

அங்கு சந்திரபுஷ்கரணியில் சயனப்பெருமாள் நீராடுவதைக் கரையில் நின்றவாறு நம்பெருமாள் கண்டருளினார். தீர்த்தவாரிக்குப் பிறகு சயனப் பெருமாள் மீண்டும் மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். தொடர்ந்து, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது.

நம்மாழ்வார் மோட்சம்

அதன்பிறகு, மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயற்பா பிரபந் தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் நாளை (ஜன.5) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன்பிறகு, அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT