தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 69 சார்ஆட்சியர் நிலையிலுள்ள பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10,737 பேர் எழுதுகின்றனர்.
இத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை யில் நேற்று ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் அண்ணாதுரை பேசியது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 முதநிலைத் தேர்வு 3-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது. விழுப்புரம் வட்டம் மற்றும் விக்கிர வாண்டி வட்டங்களில் 39 தேர்வுமையங்களில் 10,737விண்ணப்ப தாரர்கள் தேர்வுவெழுத உள்ளனர்.தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தேர்வு கூடங்களைக் கண்காணித்திட துணைஆட்சியர் நிலையில் 3 பறக்கும்படை அலுவலர்கள், வட்டாட்சியர்மற்றும் துணை வட்டாட்சியர் நிலை யில் உள்ள 7 நடமாடும் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாற்றுத் திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தரைத்தளத்தில் தனிஅறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மைங்களில் குடிநீர் உள் ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் ஏற்பாடு செய்திட முதன்மைக் கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு நாளன்று தடையின்றி மின்சாரம் வழங்கிட விழுப்புரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதிடவும், தேர்வு சுமுகமாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன் னேற்பாடுகளையும் செய்து தேர்வு நடத்திட தயார் நிலையில் உள்ளது என ஆட்சியர் அண்ணாதுரை தெரி வித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பு செயலாளர்,தேர்வாணைய பிரிவு அலுவலர்கள், துணைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.