Regional02

புது மாப்பிள்ளை தற்கொலை

செய்திப்பிரிவு

சின்னமனூர் கீழபூலாநந்தபுரத்தைச்சேர்ந்த மாரி யப்பன் மகன் கிருஷ்ணவேல்(26). இவரும் அரண்மனைப்புதூர் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பேச்சியம்மாளும் (24) காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் திருமணத்துக்கு கிருஷ்ணவேல் மறுத்துள்ளார். பின்னர் போலீஸார் முன்னிலையில் சமரசம் ஏற்பட்டு, கடந்த 27-ம் தேதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தேனி அருகே அன்னஞ்சியில் வீடு எடுத்து தங்கிய நிலையில் கிருஷ்ணவேல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அல்லிநகரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT