சேலம் மாநகராட்சி பகுதியில் நடைபயிற்சியின்போது 615 கிலோ குப்பை அகற்றப்பட்டன.
சேலத்தை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
இப்பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை சூரமங்கலம் மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் இப்பணி நடைபெற்றது. இப்பணியில் 550 தன்னார்வலர்கள் ஈடுபட்டு 615 கிலோ கழிவுகள் சேகரித்து அகற்றினர்.
கொண்டலாம்பட்டி மண்டலம் ரங்கபுரம் பகுதியில் நடந்த இப்பணி யில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.