Regional01

ஈரோட்டில் பாஜக மகளிரணி ஆலோசனை

செய்திப்பிரிவு

ஈரோட்டில் பாஜக மகளிரணியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கீதா தலைமை வகித்தார். மகளிரணி மாநில பொதுச் செயலாளர் மோகனப்பிரியா, மாநில துணைத் தலைவர் சபிதா போஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு மகளிரணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கோவை மண்டல மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட தலைவர் புனிதம், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா மற்றும் நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT