போச்சம்பள்ளி மற்றும் உத்தனப் பள்ளி அருகே நடந்த விபத்துகளில் ஓய்வு பெற்ற வன ஊழியர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் குருகப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (25). இவர் நேற்று முன்தினம் இரவு புலியூர் - ஊத்தங்கரை சாலையில் உள்ள சாலமரத்துப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கெரிகேப்பள்ளியை சேர்ந்த விவசாயி செல்வம் (40) என்பவர், எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். சாலமரத்துப் பட்டி இணைப்பு சாலை அருகே வந்த போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக கல்லாவி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி விபத்து