புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் அருகே வல்லநாட்டில் உள்ள கண்மாய் கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
வல்லநாட்டில் 712 ஏக்கர் பரப்பளவு கொண்ட வல்லநாடு கண்மாயில் தற்போது பெய்த மழையால் ஓரளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. இக்கண்மாயில் உள்ள 11 மதகுகளில் 7-வது மதகின் அருகில் நேற்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறத் தொடங் கியது. இதனால், கரை முழுவதும் உடைந்து, மதகும் இழுத்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, விவசாயிகள் திரண்டு சென்று மணல் மூட்டை களை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.
உடைப்பு ஏற்பட்ட கண்மாய் பகுதியை புதுக்கோட்டை கோட் டாட்சியர் தண்டாயுதபாணி, ஆலங் குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் மற்றும் பொதுப் பணித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து வல்லநாடு பகுதி விவசாயிகள் கூறியது:
இந்த கண்மாயில் 3 மாதங் களுக்கு முன்பு ரூ.63 லட்சத் தில் குடிமராமத்து திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி முறை யாக நடைபெறாததே இதற்கு காரணம். எனவே, நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள் மதகு மற்றும் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.