Regional02

சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள மருதூரைச் சேர்ந்தவர் கோவிந்தன்(60). விவசாய கூலித் தொழி லாளியான இவர், மண்ணால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில், நேற்று அதிகாலை இவரது வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தன், சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT