Regional01

தமாகாவின் பலத்துக்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதிகளைப் பெறுவோம் ஜி.கே.வாசன் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நடை பெற்ற தமாகா தென்மண்டல நிர்வாகி கள் கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். எங்கள் கட்சியின் பலத்துக்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதியை பெற்றுக் கொள்வோம். பாஜகவை தவிர எந்த அரசியல் கட்சியும் எங்களுக்கு இத்தனை சீட்டுகள் தர வேண்டும் என அறிவிக்க வில்லை. ரஜினி அரசியலுக்கு வராதது அவரது உடல் நலத்துக்கு நன்மை.

தமிழகத்தில் தமாகா இளைஞர் அணியின் கூட்டம் 2 இடங்களில் நடைபெறும். அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதே தமாகாவின் தலையாய பணியாக இருக்கும்.

எங்கள் கூட்டணியின் அதிகார பூர்வ முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். நல்லவர்கள் கூட்டணி என்பதால் ரஜினி எங்களை ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. திமுக கூட்டணி தோல்வியைத் தழுவும் கூட்டணி.

சட்டப் பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் எனது முதல் பணி. ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்குவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது தோல்வி பயத்தை காட்டுகிறது என்றார்.

SCROLL FOR NEXT