Regional01

பைக்கில் புகுந்த பாம்பு இளைஞரை கடித்தது

செய்திப்பிரிவு

செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முப்பிடாதி (23). இவர், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, கடைக்கு சென்ற போது, காலில் ஏதோ ஒன்று கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாத அவர், வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிப் பார்த்த போது வாகனத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று, பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். முப்பிடாதி சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

SCROLL FOR NEXT