Regional01

வள்ளலார் சபையில் கருத்தரங்கம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்ட வலத்தில் உள்ள வள்ளலார் சபையில் புத்தாண்டு சிறப்பு கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நந்தினி பதிப்பக உரிமையாளர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் பச்சையம்மாள், தங்க விசுவநாதன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் சுப்ரமணிபாரதியார் வரவேற்றார். அருணை யும் கருணையும் என்ற தலைப்பில் பாவலர் குப்பன் உரையாற்றினார்.

மேலும், பசி என்ற தலைப்பில் கோவிந்த ராஜன், வள்ளலார் என்ற தலைப்பில் கோவிந்தசாமி, மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் வாசுதேவன், மார்கழியின் பெருமை என்ற தலைப்பில் பாபு தரணி, நாளும் கோளும் என்ற தலைப்பில் தேவிகாராணி, ஆண்டாள் நாச்சியார் என்ற தலைப்பில் பாக்கியலட்சுமி ஆகியோர் பேசினர். முன்னதாக, ராமஜோதி மற்றும் புருஷோத்தமன் குழுவினர் அருட்பா பாடல்களை பாடினர்.

SCROLL FOR NEXT