Regional02

அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணிக்கு கலந்தாய்வு இன்றுமுதல் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஏற்கெனவே போட்டித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு வழங்க கலந்தாய்வு இன்று திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்குகிறது. நாளை (3-ம் தேதி) வரை நடைபெற உள்ள இந்த கலந்தாய்வு, இ.எம்.ஐ.எஸ் இணையதளம் மூலம் வழங்கப்பட்ட வரிசை எண் 1 முதல் 400 வரை இன்றும், வரிசை எண் 401 முதல் 742 வரை நாளையும் நடைபெற உள்ளது.

ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், இந்த கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்கவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT