விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் மனு வழங்கிய தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. 
Regional02

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை விருதுநகர் ஆட்சியரிடம் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கோரிக்கை

செய்திப்பிரிவு

வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் திமுக வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அளித்துள்ள மனு:

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை, மாதிரி வாக்குப் பதிவு ஆகியவை அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்த வேண்டும். வாக்காளர் சேர்க்கை, நீக்கம் ஆகியவற்றில் உள்ள குறைகளை முழுமையாகச் சரிசெய்து பட்டியல் வெளியிட வேண்டும்.

சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஆணைகளை உடனே வழங்கி, நிதி ஒதுக்கிப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். குடிமராமத்துப் பணிகளில் முழுமை பெறாத கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்பன உட்பட பல் வேறு கோரிக்கைகளை தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT