Regional01

50 வாகனங்களில் பம்பர் அகற்றம் சேலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சேலத்தில் சாலை போக்கு வரத்து விதிமுறைகளை மீறி 50 வாகனங்களில் பொருத்தப் பட்டிருந்த முன்புற பம்பரை அதிகாரிகள் அகற்றினர்.

நான்கு சக்கர வாகனங் களில் முன்புறம் பம்பர் பொருத்தி இயக்குவதால், விபத்து ஏற்படும் நேரங்களில் எதிரே மோதும் வாகனங்கள், நபர்களுக்கு அதிக சேதம் ஏற்படுத்தியும், உயிரிழப்பு விளைவிப்பை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.

இதனால், வாகனங்களின் முன்புறம் பம்பர் பொருத்தி யிருந்தால், உடன டியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பம்பர்களை வாகன உரிமையாளர்கள் அவர்களாகவே முன் வந்து அகற்றிக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பி னும், பல வாகனங்களில் முன்புற பம்பர் அகற்றாமல் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, சேலம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலக அதிகாரிகள் வாகனங்களில் முன்புறம் பம்பர் பொருத்தி இயக்கப்படுகிறதா என கண்காணிப்பு பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவன் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்களும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தணிக்கையில் 18 வாகனங்களில் இருந்து பம்பரை அகற்றி, ரூ.18 ஆயிரத்து 800 அபராதம் விதித்துள்ளனர். மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தணிக்கையில் 32 வாகனங் களில் பம்பரை அகற்றி, ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

சேலத்தில் இதுவரை 50 வாகனங்களில் பம்பரை அதிகாரிகள் அகற்றி, அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து நேற்றும் மாநகரம் முழுவதும் அதிகாரிகள் வாகனங்களில் முன்புறம் பம்பர் பொருத்தப்பட்டுள்ளதா என வாகன தணிக்கையில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT