Regional01

பவானிசாகர் அணை அமைய காரணமான தியாகி ஈஸ்வரன் அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை பாஜக தலைவர் முருகன் உறுதி

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணை அமையக் காரணமாக இருந்த தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் அஞ்சல்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப் படும், என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

ஈரோட்டில் பவானிசாகர் அணை அமைய முக்கிய காரணமாக விளங்கிய தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் படத்திறப்பு விழா, நேற்று முன் தினம் மாலை நடந்தது. விழாவில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்று, ஈஸ்வரன் படத்தைத் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வறண்டபூமியாக இருந்த ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையால் வளமான பூமியாக மாறியுள்ளது. இந்த அணை அமைய தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் காரணமாக இருந்தார். அவரது முயற்சியால் அணை கட்டப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு காரணமானவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான எம்.ஏ.ஈஸ்வரனுக்கு மாவட்டத்தில் நினைவிடம் அமைக்கவும், அவருடைய பெயரில் அருங்காட்சி யகம் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தியாகி ஈஸ்வரன் நினைவு அஞ்சல்தலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். விழாவில், பல்வேறு பாசன சபை நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT